அமெரிக்காவின் அரசியல் விவகாரங்களுக்கான இராஜாங்க செயலாளர் விக்டோரியா நுலண்ட் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார் என அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஜனவரி 28ஆம் திகதி முதல் பெப்ரவரி 3ஆம் திகதி வரை அவர் இந்தியா, நேபாளம், கட்டார் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார் எனவும் குறிப்பிடப்படுகின்றது.
இலங்கைக்கான தனது விஜயத்தின் போது அவர் இலங்கையின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்கும் மனித உரிமைகளை பாதுகாப்பதற்கும் நல்லிணக்கத்தை ஊக்குவிப்பதற்கும் அமெரிக்காவின் ஆதரவை வழங்குவார் என எதிர்பாக்கப்படுகிறது.(TrueCeylon)