கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சையில் ஆள்மாறாட்டம் செய்த மூவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண இதை தெரிவித்துள்ளார்.
களுவில பரீட்சை மையத்தில் கணித பரீட்சைக்காக தோற்றவிருந்த பரீட்சார்த்திக்கு பதிலாக பரீட்சைக்கு தோற்றிய நபர் ஒருவர் அனுராதபுரம் – ஹிதொகம காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் 21 வயதான இளைஞர் ஒருவர் என்பதுடன், தனது உறவினர் ஒருவருக்காக பரீட்சையில் தோற்றியிருக்கிறார் என விசாரணையின் போது தெரிய வந்துள்ளது.
Discussion about this post