ரூபாவுக்கு நிகரான அமெரிக்க டொலரின் பெறுமதி குறையும் விகிதத்துக்கேற்ப விமானப் பயணச்சீட்டுகளின் விலைகளைக் குறைக்குமாறு இலங்கையிலுள்ள விமான நிறுவனங்களின் பிரதிநிதிகளிடம் கேட்டுள்ளதாக துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
இதேவேளை,விமானப் பயணச்சீட்டுகளின் விலை ஏற்கனவே சுமார் 20 சத வீதம் குறைக்கப்பட்டுள்ளது.
இதன்படி எதிர்காலத்தில் விமானப் பயணச்சீட்டுகளின் விலை மேலும் குறைக்கப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார். (TrueCeylon)