தலிபான் அமைப்பிற்கு ஆதரவு வழங்கும் வகையிலான அனைத்து பதிவுகளையும் அகற்ற பேஸ்புக் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளதாக சர்வதேச ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆப்கானிஸ்தானை தலிபான்கள் முழுமையாக கைப்பற்றியுள்ள நிலையிலேயே, பேஸ்புக் நிறுவனம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தலிபான் அமைப்பு தொடர்பிலான பதிவுகளை வெளியிடுவதற்கு தாம் தொடர்ச்சியாக தடை விதித்துள்ளதாகவும் பேஸ்புக் நிறுவனம் கூறியுள்ளது.
தலிபான் அமைப்பு, அமெரிக்க சட்டத்திற்கு அமைய, தடை செய்யப்பட்ட அமைப்பு என்ற நிலையிலேயே, பேஸ்புக் நிறுவனம் இந்த தீர்மானத்தை எட்டியுள்ளதாக சர்வதேச ஊடகத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.
ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த புத்திஜீவிகள் குழுவொன்று, பதிவுகளின் உள்ளடக்கங்கள் தொடர்பில் மிக ஆழமாக ஆராய்ந்து, தலிபான்களுக்கு சார்பான பதிவுகளை அகற்ற நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அந்த நிறுவனம் தெரிவிக்கின்றது.
Discussion about this post