நாடு கொவிட்-19 வைரஸின் மிக தீவிர நிலைமையை இன்று எதிர்கொண்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவிக்கின்றார்.
இந்த விடயம் தொடர்பில் உடன் நடவடிக்கை எடுக்க தவறும் பட்சத்தில், பெரும்பாலான உயிர்களை இழக்க வேண்டிய நிலைமை ஏற்படும் என அவர் கூறியுள்ளார்.
கொவிட் தடுப்புக்கான குழு தோல்வியடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மக்களின் சுகாதார கட்டமைப்பு செயலிழந்துள்ளதாகவும், ஒக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.
அதேபோன்று, வென்டலேட்டர்கள் மற்றும் வைத்தியசாலைகளில் கட்டில்களுக்கான தட்டுப்பாடுகள் நிலவுவதாக அவர் கூறுகின்றார்.
எதிர்வரும் காலங்களில் இந்த நிலைமை மிக தீவிர நிலைமையை ஏற்படுத்தும் என அவர் தெரிவிக்கின்றார்.
இந்த தொற்று நோயிலிருந்து மக்களை பாதுகாத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகளை அமைச்சரவையின் ஊடாக எட்ட வேண்டும் என ரணில் விக்ரமசிங்க கோரியுள்ளார்.
தற்போதே விரைந்து செயற்படுமாறும், அவ்வாறு செயற்பட தவறும் பட்சத்தில் பல உயிர்களை இழக்க வேண்டிய நிலைமை ஏற்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார்.
Discussion about this post