தீப்பற்றியுள்ள எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பலிலிருந்து கடலில் வீழ்ந்து கரையொதுங்கிய இரசாயன மற்றும் ஏனைய பொருட்கள் வத்தளை – ப்ரீதிபுர முதல் நீர்கொழும்பு வரையான கடற்கரையில் கரையொதுங்கின.
இதனால் சில பிரேதேசங்களில் அமில மழை பெய்யக்கூடிய சாத்தியங்கள் உள்ளதாக சமுத்திர பாதுகாப்பு அதிகார சபை தலைவர் தர்ஷனி லஹந்தபுர தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இந்த சம்பவத்தினால் நாட்டில் வளிமாசடைவு ஏற்படாது என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவகம் அறிவித்துள்ளது.
குறித்த கப்பலிலிருந்து வெளியேறிய எரிப்பொருள் கடலில் கலந்தமையினால் ஏற்படக்கூடிய அபாயம் மற்றும் கடலுணவுகளை உட்கொள்வது தொடர்பில் ஹிரு நாரா நிறுவனத்திடம் வினவியது.
அது தொடர்பில் பதிலளித்த அந்த நிறுவனத்தின் சுற்றாடல் பிரிவின் பணிப்பாளர் சாமலி வீரசேகர,
தற்போதைய நிலையில், கடந்த 5, 6 நாட்களாக மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை என்பதால், தற்போது எவ்வித பிரச்சினையும் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.
எவ்வாறிருப்பினும், மீன்களின் மாதிரிகளைப் பெற்று ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்துள்ளார்.
Discussion about this post