தினேஷ் ஷாப்டரின் மரணம் தற்கொலையா அல்லது கொலையா என்பதை தீர்மானிக்க ஐந்து பேர் கொண்ட விசேட மருத்துவ குழு அடுத்த வாரம் நியமிக்கப்படும் என கொழும்பு மேலதிக நீதவான் திருமதி ரஜீந்திர ஜயசூரிய இன்று (22) திறந்த நீதிமன்றில் அறிவித்தார்.
ஐவர் கொண்ட இந்த சிறப்பு மருத்துவ குழுவிற்கான நிபுணர்களின் பட்டியல் சுகாதார பணிப்பாளர் நாயகம் மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவரினால் தயாரிக்கப்பட்டுள்ளது.
தினேஷ் ஷாப்டரின் மரணம் தொடர்பான விசாரணை இன்று (22) நீதிமன்றில் மீண்டும் எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த தகவல் வெளியானது.(TrueCeylon)