அநுராதபுரம், பூஜா நகருக்கு அருகில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 13 வயதுடைய சிறுமியை வன்புணர்வு செய்த 19 வயது இளைஞன் ஒருவர் நேற்று (02) கைது செய்யப்பட்டதாக அனுராதபுரம் பொலிஸார் தெரிவித்தனர்.
அனுராதபுரம் தன்னாயம்குளம் பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
தனது வீட்டிற்கு அருகிலுள்ள அத்தையின் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்த போது, மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர் ஒருவர் தன்னை யாருமற்ற வீட்டிற்கு வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக சிறுமியின் வாக்குமூலத்தில் கூறப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
குறித்த சிறுமி அனுராதபுரம் வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
மேலும், கைது செய்யப்பட்ட சந்தேகநபர் அநுராதபுரம் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர் மார்ச் 14ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.(TrueCeylon)