இலங்கையில் கொவிட் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 74ஆக அதிகரித்தது.
நேற்றைய தினம் மேலும் ஒருவர் கொவிட் தொற்றினால் உயிரிழந்த நிலையிலேயே, கொவிட் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவிக்கின்றது.
கொழும்பு 02 பகுதியைச் சேர்ந்த 70 வயதான ஒருவரே கொவிட் தொற்றினால் உயிரிழந்துள்ளார்.
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே இவர் உயிரிழந்துள்ளார்.