1996ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி உலகக் கிண்ணத்தை கைப்பற்றிய சந்தர்ப்பத்தில், ஏற்பட்ட ஓர் உணர்வு ரீதியான நினைவுகளை கூறி, கண்ணீர் விட்டார் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹஷான் திலகரத்ன.
அத தெரணவிற்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு கண்ணீர் விட்டு உணர்வுப்பூர்வமாக கருத்து வெளியிட்டார்.
கிண்ணத்தை பெற்றுக்கொண்டதன் பின்னர், மகிழ்ச்சி கொண்டாட்டங்களில் ஈடுபட்டிருந்த தருணத்தில், அர்ஜுண ரணதுங்கவுடன் அனைவரும் திடீரென கீழே வீழ்ந்ததாக அவர் கூறினார்.
அதன்போது, அர்ஜுண ரணதுங்க வசமிருந்த காசோலையை, யாரோ ஒருவர் திருடியதாக அர்ஜுண கூறிய போது, ஷான் திலகரத்ன தெரிவித்தார்.
”காசோலை திருடப்பட்டால் பரவாயில்லை, கிண்ணத்தை அரவணைத்துக்கொள்ளுங்கள்” என குருசிங்ஹ பதிலளித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
அந்த காசோலையில் எவ்வளவு பணம் இருந்தது என தனக்கு இன்றும் தெரியாது என கூறிய அவர், தமக்கு கிண்ணமே முக்கியமானதாக இருந்தது எனவும் கண்ணீர் விட்டு, உணர்வு ரீதியான கூறினார். (AdaDerana)
Discussion about this post