கொவிட்-19 தொற்றினால் உயிரிழக்கும் நபர்களின் பூதவுடல்களை நல்லடக்கம் செய்கின்றமை குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கைகள் சில கிடைக்கப் பெறவுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராட்ச்சி தெரிவிக்கின்றார்.
கொவிட் தொற்றினால் உயிரிழக்கும் நபர்களின் பூதவுடல்களை நல்லடக்கம் செய்வது குறித்து கடந்த அமைச்சரவை கூட்டத்தில் எந்தவொரு தீர்மானமும் எட்டப்படவில்லை என அமைச்சர் கூறுகின்றார்.
இந்த விடயம் தொடர்பில் நியமிக்கப்பட்ட புத்திஜீவிகள் குழுவின் அறிக்கைக்கு அமைய, நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறே அமைச்சரவை தனக்கு அனுமதி வழங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.
குறித்த குழுவின் அறிக்கை கிடைத்ததன் பின்னரே, இந்த விடயம் தொடர்பில் இறுதித் தீர்மானத்தை எட்ட முடியும் என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராட்ச்சி நம்பிக்கை வெளியிடுகின்றார்