இந்தியாவின் நிரு டயமன்ட் கடர்ஸ் நிறுவனத்தினால் இலங்கைக்கு 65 லட்சம் ரூபா பெறுமதியான PCR இயந்திரமொன்று கையளிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் நிரு டயமன்ட் கடர்ஸ் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி சஞ்ஜய பெட்டினால், பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவிடம் இந்த இயந்திரம், அலரிமாளிகையில் வைத்து கையளிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கையளிக்கப்பட்ட PCR இயந்திரம், தியதலாவை வைத்தியசாலைக்கு வழங்கப்படவுள்ளதாக பிரதமர் ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உபத் தலைவரும், பிரதமரின் இணைப்புச் செயலாளருமான செந்தில் தொண்டமானின் முயற்சியின் ஊடாக இந்த PCR இயந்திரம் இலங்கைக்கு கையளிக்கப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சின் பரிந்துரைக்கு அமைய, தியதலாவை வைத்தியசாலைக்கு இந்த இயந்திரம் வழங்கப்படவுள்ளது.
கொவிட்-19 தடுப்புக்கான தனியார் துறையினர் வழங்கும் பங்களிப்புக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ இதன்போது நன்றி தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்வில், பிரதமர் அலுவலகத்தின் பிரதானி யோஷித்த ராஜபக்ஸ, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உபத் தலைவரும், பிரதமரின் இணைப்புச் செயலாளருமான செந்தில் தொண்டமான் ஆகியோரும் கலந்துக்கொண்டிருந்தனர். (TrueCeylon)
Discussion about this post