நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்கள் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 6ஆக உயர்வடைந்துள்ளது.
2 பேர் காயமடைந்துள்ளதுடன், 5 பேர் காணாமல் போயுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது.
இரத்தினபுரி, புத்தளம் மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களிலேயே இந்த உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளன.
மண்சரிவு மற்றும் வெள்ளப் பெருக்கு காரணமாகவே இந்த உயிரிழப்புக்கள் நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, களனி கங்கையின் நீர் மட்டம் அதிகரித்துள்ளமையினால், களனி கங்கையை அண்மித்துள்ள பகுதிகளில் வாழும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், தெஹிஓவிட்ட, ருவன்வெல்ல, சீதாவக்க, தொம்பே, ஹோமாகம, கடுவளை, பியகம, கொலன்னாவ, கொழும்பு மற்றும் வத்தளை ஆகிய பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதாக நீர்பாசன திணைக்களம் தெரிவிக்கின்றது,
மேல், சபரகமுவ, வடமேல், மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் மழையுடனான வானிலை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறுகின்றது.
சபரகமுவ மாகாணத்திலும், நுவரெலியா, கண்டி ஆகிய பகுதிகளிலும் சில இடங்களில் இன்று 75 மில்லிமீற்றருக்கு அதிக கடும் மழை பெய்யும் என எதிர்வு கூறப்படுகின்றது.
மேல் மாகாணத்திலும், காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
கடும் மழையுடனான வானிலை தொடரும் சந்தர்ப்பங்களில், தற்காலிகமாக கடும் காற்று வீசும் என திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. (TrueCeylon)
Discussion about this post