2020ம் ஆண்டு நடைபெற்ற 5ம் தர புலமை பரிசில் பரீட்சை பெறுபேறுகளுக்கு அமைய, மாவட்ட ரீதியிலான வெட்டுப்புள்ளிகளின் அடிப்படையில் பிரபல பாடசாலைகளின் 6ம் தரத்தில் இணைத்துக்கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
அனைத்து விண்ணப்பப்படிவங்கள் மற்றும் அறிவுறுத்தல் பத்திரங்கள் பாடசாலைகளின் அதிபர்களிடம் பெற்றுக்கொள்ள முடியும் என கல்வி அமைச்சு தெரிவிக்கின்றது.
இதன்படி, குறித்த விண்ணப்பப்படிவங்களை எதிர்வரும் 10ம் திகதிக்கு முன்னர், பாடசாலை அதிபரிடம் கையளிக்குமாறு கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
கொவிட்-19 தொற்று காரணமாக மூடப்பட்டுள்ள பிரதேசங்களிலுள்ள மாணவர்களின் விண்ணப்பங்களையும், சுகாதார வழிமுறைகளுக்கு அமைய பாடசாலைகளுக்கு பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறும் அதிபர்களுக்கு அறிவுறுத்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளது. (TrueCeylon)