பாணின் விலை இன்று நள்ளிரவு முதல் குறைக்கப்படும் என பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது..
அதன்படி, இன்று (8) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில், 450 கிராம் (ஒரு இறாத்தல்) நிறையுடைய பாணின் விலையை 10 ரூபாவினால் குறைக்க தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, பாண் தற்போது, 160, 170 மற்றும் 180 ரூபா ஆகிய வெவ்வேறு விலைகளில் விற்பனை செய்யப்படுவதாக அண்மையில் பேக்கரி உரிமையாளர் சங்கம் தெரிவித்திருந்தது.(TrueCeylon)