ஆப்கானிஸ்தானில் உள்ள இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்து வருவதற்கான விசேட வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வௌிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
சுமார் 50 இலங்கையர்கள் ஆப்கானிஸ்தானில் வசிப்பதாக வௌிவிவகார அமைச்சர், பேராசிரியர் ஓய்வுபெற்ற அட்மிரல் ஜயநாத் கொழம்பகே தெரிவித்தார்.
ஆப்கானிஸ்தானிலுள்ள இலங்கை தூதரகத்தில் தற்போது யாரும் இல்லை என்பது தெரியவந்துள்ளது.
43 இலங்கையர்கள் காபுல் நகரிலுள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கான தூதரகத்தில் பணியாற்றுவதாக அறிக்கையிடப்பட்டுள்ளதாக, ஆப்கானிஸ்தானுக்கான இலங்கை தூதரகத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.
அவர்களில் பெரும்பாலானோர் இலங்கைக்கு திரும்புவதற்கான விமான பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்துள்ளதாகவும் அவர் கூறினார்.
அந்நாட்டில் காணப்படும் விமான சேவைக்கான வசதிகளுக்கு அமைய, இலங்கையர்கள் நாடு திரும்பவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Discussion about this post