நாட்டில் கொவிட் பரவல் காரணமாக தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை 5ஆக குறைவடைந்துள்ளது.
களுத்துறை, கண்டி மற்றும் மட்டக்களப்பு ஆகிய பகுதிகளின் 5 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளே தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கொவிட்−19 தடுப்புக்கான செயற்பாட்டு மையம் தெரிவிக்கின்றது.
களுத்துறை மாவட்டத்தின் வெயங்கல்ல மேற்கு மற்றும் வெயங்கல்ல கிழக்கு ஆகிய பகுதிகள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும், கண்டி மாவட்டத்தின் பாலியகொட்டுவ மற்றும் கால்ஹின்ன ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
அத்துடன், மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி 166 A கிராம உத்தியோகத்தர் பிரிவு தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. (TrueCeylon)
Discussion about this post