லாஃப் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதன்படி, 12.5KG சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை 984 ரூபாவினால் அதிகரிக்க நிறுவனம் தீர்மானித்துள்ளது.
லாஃப் 12.5KG சிலிண்டரின் புதிய விலை 2,840 ரூபா என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 5KG லாஃப் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 393 ரூபாவால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், அந்த சிலிண்டரின் புதிய விலை 1,136 ரூபா என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. (TrueCeylon)