கடவத்தை நகரிலுள்ள ஆடை விற்பனை நிலையமொன்றில் கொள்ளை சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
இந்த வர்த்தக நிலையத்திலிருந்து சுமார் 270 லட்சம் ரூபா கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பில் குருநாகல் பகுதியைச் சேர்ந்த 32 வயதான சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர், வங்கி கொள்ளை உள்ளிட்ட பல்வேறு கொள்ளை சம்பவங்களுடன் இதற்கு முன்னரும் தொடர்புப்பட்டவர் என பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கடவத்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். (TrueCeylon)