இலங்கை வழியாக இந்தியாவிற்கு கடத்தப்பட்டதாக கூறப்படும் 400 கிலோகிராம் கொக்கேன் போதைப்பொருள் தூத்துக்குடி துறைமுகத்தில் கைப்பற்றப்பட்டுள்ளது.
பிரேஸிலிலிருந்து இலங்கை வழியாக இந்த போதைப்பொருள் கடத்தப்பட்டுள்ளமை, ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக அந்த நாட்டு பாதுகாப்பு பிரிவினரை மேற்கோள்காட்டி, தமிழக ஊடகவியலாளர் ஒருவர் ட்ரூ சிலோனுக்கு தெரிவித்தார்.
வெளிநாட்டிற்கு சொந்தமான கப்பலின் மூலம் 8 கொள்கலன்களில் இந்த போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகவும் அவர் கூறுகின்றார்.
மரக்குற்றி கொண்டு செல்லும் போர்வையில், இந்த கொக்கேன் போதைப்பொருள் கடத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு மீட்கப்பட்ட கொக்கேன் போதைப்பொருள், பல கோடி ரூபா பெறுமதியானது என தெரிய வருகின்றது.
இந்த சம்பவம் தொடர்பில், இந்திய பாதுகாப்பு பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். (TrueCeylon)
Discussion about this post