40 வருடங்களுக்கு முன்னர் தனியார்மயப்படுத்தப்பட்ட புடவை நிறுவனங்களின் ஊழியர்களுக்கு மாதாந்த கொடுப்பனவு வழங்கும் நடவடிக்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் இன்று இடம்பெற்றது.
40 வருடங்களுக்கு முன்னர் தனியார் மயப்படுத்தப்பட்ட 3330 ஊழியர்களுக்கான மாதாந்த கொடுப்பனவு வழங்கும் நடவடிக்கை அலரிமாளிகையில் இன்று இடம்பெற்றது.
1980 மற்றும் 1982ம் ஆண்டுகளில் தனியார்மயப்படுத்தப்பட்ட புடவை நிறுவனங்களில், 10 வருடங்களுக்கு குறைவான சேவை காலத்தையுடைய ஊழியர்களுக்கு, அவர்களது வாழ்நாள் முழுவதும் இவ்வாறு மாதாந்த கொடுப்பனவு பெற உரிமை உள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவிக்கின்றது.
2020ம் ஆண்டு ஜுலை மாதம் 5ம் திகதி அமைச்சரவை தீர்மானத்திற்கு அமைய, திறைசேரியிலிருந்து புடவை கைத்தொழில் திணைக்களத்திற்கு 95 மில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ கருத்து வெளியிட்டுள்ளார்.
தான் தொழில் அமைச்சராக கடமையாற்றிய காலப் பகுதியிலிருந்து அவதானம் செலுத்திவந்த ஒரு பிரச்சினைக்கு, தீர்வை பெற்றுக்கொடுக்க முடிந்துள்ளமை மகிழ்ச்சி அளிப்பதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.
40 வருடங்களாக நீடித்த பிரச்சினைக்கு, பிரதமர் உள்ளிட்ட அரசாங்கம் எந்தவித பிரச்சினையும் இன்றி தீர்வை பெற்றுக்கொடுத்துள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.
இந்த நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர, புடவை கைத்தொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் திமுது குலதிலக்க உள்ளிட்ட பலரும் கலந்துக்கொண்டுள்ளனர். (TrueCeylon)
Discussion about this post