பாசிலோனாவிலுள்ள 4 சிங்கங்களுக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட சிங்கங்களில் மூன்று பெண் சிங்கங்களும் அடங்குவதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.
பாசிலோனா மிருகக்காட்சிசாலையிலுள்ள சிங்கங்களுக்கே கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ஷாலா, நிமா மற்றும் ரன் ரன் ஆகிய மூன்று பெண் சிங்கங்களுக்கும், கியூம்பே என்ற ஆண் சிங்கத்துக்குமே இவ்வாறு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அதேவேளை, மிருகக்காட்சிசாலையில் கடமையாற்றும் இரண்டு ஊழியர்களுக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மிருகங்களுக்கு எவ்வாறு தொற்று ஏற்பட்டது எனவும், அது மனிதர்களுக்கு எவ்வாறு தொற்றியது எனவும் விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மிருகக்காட்சிசாலையின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.