நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து கொழும்பிற்கு வருகைத் தந்து, தற்காலிகமாக தங்கி, தொழில்களில் ஈடுபடும் நபர்கள் தொடர்பான தகவல்களை திரட்டும் விசேட வேலைத்திட்டமொன்று இன்று (14) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.
இன்று முதல் எதிர்வரும் 16ம் திகதி வரை இந்த திட்டம் முன்னெடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவிக்கின்றார்.
தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தல், குற்றங்களை குறைத்தல் மற்றும் போதைப்பொருளை ஒழித்தல் ஆகியன இந்த நடவடிக்கையின் பிரதான நோக்கம் என அவர் குறிப்பிடுகின்றார்.
கொழும்பு மாநகர எல்லைக்குள் காணப்படுகின்ற நிரந்தர பதிவாளர்களின் வீடுகள், வர்த்தக நிலையங்கள், நிறுவனங்கள், அரச மற்றும் தனியார் நிர்மாண வளாகங்கள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் தற்காலிகமாக தங்கியுள்ள குடியிருப்பாளர்களை பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் தற்காலிகமாக தங்கியுள்ளவர்கள் தமது தகவல்களை உரிய வகையில் வழங்குமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கேட்டுக்கொண்டுள்ளார். (TrueCeylon)