இலங்கையில் கொவிட் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 300யை அண்மித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவிக்கின்றது.
அரசாங்க தகவல் திணைக்களத்தினால் இன்று வெளியிடப்பட்ட அறிக்கையின் பிரகாரம், நாட்டில் கொவிட் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 297ஆக அதிகரித்துள்ளது.
நாட்டில் இறுதியாக 7 கொவிட் உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளதாகவும் திணைக்களம் தெரிவிக்கின்றது.
கொழும்பு 06 பகுதியைச் சேர்ந்த 86 வயதான ஆண்ணொருவர் இம்தேபான மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த 26ம் திகதி உயிரிழந்துள்ளார்.
நிட்டம்புவ பகுதியைச் சேர்ந்த 73 வயதான ஆண்ணொருவர், தனது வீட்டில் இன்று உயிரிழந்துள்ளார்.
இரத்தினபுரி – கல்லேல்ல பகுதியைச் சேர்ந்த 76 வயதான பெண்ணொருவர், இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று உயிரிழந்துள்ளார்.
கொழும்பு 13 பகுதியைச் சேர்ந்த 61 வயதான ஆண்ணொருவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையிலிருந்து, முல்லேரியா ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில், நேற்று உயிரிழந்துள்ளார்.
கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 61 வயதான கைதியொருவரும் கொவிட் தொற்றில் உயிரிழந்துள்ளார்.
சிறைச்சாலை வைத்தியசாலையில் கொவிட் தொற்றாளர் என அடையாளம் காணப்பட்டதை அடுத்து, கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில், அவர் கடந்த 16ம் திகதி உயிரிழந்துள்ளார்.
கொழும்பு 06 பகுதியைச் சேர்ந்த 67 வயதான பெண்ணொருவர் தனியார் வைத்தியசாலையொன்றில் கடந்த 24ம் திகதி உயிரிழந்துள்ளார்.
என்தரமுல்ல பகுதியைச் சேர்ந்த 62 வயதான ஆண்ணொருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், கடந்த 21ம் திகதி உயிரிழந்துள்ளார்.
இதன்படி, இலங்கையில் கொவிட் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 300தை அண்மித்துள்ளது. (TrueCeylon)
Discussion about this post