இலங்கையில் மூன்று விதமான டெல்டா திரிபுகள் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஷன்ன ஜயசுமன்ன தெரிவிக்கின்றார்.
நாட்டிற்குள் தற்போது டெல்டா வைரஸானது, 60 முதல் 70 வீத வேகத்தில் பரவி வருகின்றமையை, விசேட நிபுணர்கள் உறுதிப்படுத்தியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்றைய தினம் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பல்வேறு நோய் அறிகுறிகளை ஏற்படுத்துகின்ற மற்றும் ஒக்சிஜனுடன் போராட வேண்டிய நிலைமையை ஏற்படுத்தும் வீரியம் கொண்ட வைரஸ் இதுவென அவர் தெரிவிக்கின்றார்.
இலங்கையில் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள டெல்டாவின் மூன்று வகை திரிபுகளினாலேயே, பாதிப்புக்கள் அதிகளவில் காணப்படுகின்றது என அவர் குறிப்பிடுகின்றார்.
இந்த வைரஸ் பரவலை தடுப்பதற்காக தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் கூறியுள்ளார். (TrueCeylon)
Discussion about this post