நாளொன்றில் அதிகளவிலான கொவிட் தொற்றாளர்கள் பதிவான நாடாக இந்தியா காணப்படுகின்றது.
இதன்படி, நேற்றைய தினத்தில் மாத்திரம் 3 லட்சத்து 46திற்கும் அதிகமான கொவிட் தொற்றாளர்கள் இந்தியாவில் பதிவாகியுள்ளனர்.
அதேவேளை, இந்தியாவில் நேற்றைய தினத்தில் 2624 கொவிட் உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளதாக அந்த நாட்டு ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில் கொவிட் தொற்று காரணமாக இதுவரை ஒரு கோடியே, 66 லட்சத்து 2 ஆயிரத்து 456 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், ஒரு லட்சத்து 89 ஆயிரத்து 549 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவின் டெல்லி மற்றும் மகாராஷ்ரா ஆகிய பகுதிகளிலேயே அதிகளவிலான உயிரிழப்புக்கள் நேற்றைய தினம் பதிவாகியுள்ளன.
குறிப்பாக மகாராஷ்ரா மாநிலத்தில் நேற்றைய 24 மணிநேரத்தில் மாத்திரம் 773 உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதேபோன்று, டெல்லியில் 348 கொவிட் உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளதாக அந்த நாட்டு ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. (NDTV)
Discussion about this post