டெல்டா கொவிட் புறழ்வுகள் மூன்றும் தொற்றிய தொற்றாளர்கள், உலகில் முதல் தடவையாக இலங்கையிலேயே அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் தெரிவிக்கின்றது.
ஶ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தினால் நடத்தப்பட்ட ஆய்வுகளில் இந்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பல்கலைக்கழகத்தின் நோய் எதிர்ப்பு, ஒவ்வாமை பிரிவின் பிரதானி டொக்டர் சந்திம ஜீவந்தர தெரிவிக்கின்றார்.
இந்த முறை நடத்தப்பட்ட ஆய்வுகளுக்காக 88 மாதிரிகள் பெற்றுக்கொள்ளப்பட்டதாகவும், அவற்றில் 84 மாதிரிகள் டெல்டா தொற்று என்பது உறுதியானதாகவும் அவர் கூறுகின்றார்.
டெல்டா மூன்று புறழ்வுகளும் உடைய நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவர்கள் அனைவரும் கொழும்பு எல்லைக்குள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.
இவ்வாறு மூன்று புறழ்வுகள் அடையாளம் காணப்பட்ட முதலாவது நாடு இலங்கை ஏன அவர் தெரிவிக்கின்றார்.
அடையாளம் காணப்பட்ட மூன்று புறழ்வுகளில் A701S புறழ்வானது, இலங்கையில் மாத்திரமே அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார்.
அத்துடன், A 222V என்ற புறழ்வு, உலகின் பல நாடுகளில் அடையாளம் காணப்பட்டதாகவும் அவர் கூறுகின்றார்.
அதேபோன்று, A 1078S என்ற புறழ்வானது, இலங்கை மற்றும் மலேசியா ஆகிய நாடுகளில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக டொக்டர் சந்திம ஜீவந்தர தெரிவிக்கின்றார். (TrueCeylon)
Discussion about this post