கொவிட் வைரஸ் தொற்றை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக நாட்டை முழுமையாக முடக்க வேண்டிய தேவை கிடையாது என அங்கொட தொற்று நோய் பிரிவின் விசேட வைத்தியர் டொக்டர் ஆனந்த விஜேவிக்ரம தெரிவித்துள்ளார்.
நாட்டை முடக்குவதை விடவும், குறைந்தளவிலான நடவடிக்கைகளின் ஊடாக, இந்த வைரஸ் தொற்றை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முடியும் என அவர் கூறுகின்றார்.
கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நாடு ஓரளவு முடக்கப்பட்ட போதிலும், நிறுவனங்களில் நடவடிக்கைகள் வழமை போன்று இடம்பெற்றதாக அவர் குறிப்பிடுகின்றார்.
அவ்வாறான காலப் பகுதியில் கூட, கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கான இயலுமை காணப்பட்டதாக விசேட வைத்தியர் டொக்டர் ஆனந்த விஜேவிக்ரம தெரிவிக்கின்றார். (TrueCeylon)
Discussion about this post