சுகாதார அமைச்சினால் நேற்று (18) வெளியிடப்பட்ட சுகாதார வழிகாட்டலுக்கு அமைய, மாகாண எல்லையை கடக்கக்கூடியவர்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.
சுகாதார சேவை, பொலிஸார், முப்படையினர், அரச ஊழியர்களின் உத்தியோகப்பூர்வ பயணங்கள், அத்தியாவசிய பொருள் விநியோகம், மிக நெருக்கமான உறவினர்களின் மரண வீடு (ஆவணம் அவசியம்), துறைமுகம் மற்றும் விமான நிலையங்களுக்கு பொருட்களை கொண்டு செல்வோர் (ஆவணம் அவசியம்) ஆகியோருக்கே மாகாண எல்லையை கடக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. (TrueCeylon)
Discussion about this post