நாட்டை முடக்குவதற்கு முடியாது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
எனினும், நாடு முழுவதும் கடுமையான பயணக் கட்டுப்பாடுகளை அமுல்படுத்த நடவடிக்கை எடுப்பதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.
நேற்றிரவு (17) நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போதே, ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டை முடக்கினால், நாட்டின் பொருளாதாரத்தை முன்னோக்கி கொண்டு செல்ல முடியாது எனவும், அன்றாட வருமானத்தை உழைப்போர் பாரிய அசெளகரியங்களை எதிர்நோக்குவார்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கொவிட் பரவலை தடுப்பதற்காக, தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகளை துரிதப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். (TrueCeylon)
Discussion about this post