Notice: Trying to get property 'end' of non-object in /home/trueceylon/public_html/wp-content/themes/jnews/class/ContentTag.php on line 36
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் பிரதான துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளராக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் அவிஷ்க குணவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை, தமது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் தளத்தில் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
Former @OfficialSLC batsman and coach, Avishka Gunawardene has been appointed as Afghanistan National Team’s batting coach. pic.twitter.com/7P64V6E0vU
— Afghanistan Cricket Board (@ACBofficials) August 17, 2021
அவிஷ்க குணவர்தன மீதான ஊழல் குற்றச்சாட்டுக்களிலிருந்து விடுவிக்கப்படுவதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை கடந்த மே மாதம் அறிவித்திருந்தது.
இதன்படி, அவிஷ்க குணவர்தனவிற்கு மீண்டும் கிரிக்கெட் போட்டி நடவடிக்கைகளில் ஈடுபட முடியும் எனவும் சர்வதேச கிரிக்கெட் பேரவை தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், ஆப்கானிஸ்தான் தலிபான்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டு, அந்நாட்டில் அசாதாரண சூழ்நிலை நிலவி வருகின்ற பின்னணியிலேயே, ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. (TrueCeylon)
Discussion about this post