கொழும்பு − புறக்கோட்டை − கெய்சர் வீதியிலுள்ள அனைத்து வர்த்தக நிலையங்களையும் மூடுவதற்கு கெய்சர் வீதி வர்த்தக நிலைய உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.
இதன்படி, கெய்சர் வீதியிலுள்ள அனைத்து வர்த்தக நிலையங்களும், எதிர்வரும் 10 நாட்களுக்கு மூடப்படுவதாக அந்த சங்கம் தெரிவித்துள்ளது.
நாளுக்கு நாள் உக்கிரமடைந்து வரும் கொவிட் வைரஸ் தாக்கத்தை கருத்திற் கொண்டே, இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
இதன்படி, நாளை (18) முதல் கெய்சர் வீதியிலுள்ள அனைத்து வர்த்தக நிலையங்களும் 10 நாட்களுக்கு மூடப்படவுள்ளன.
எனினும், குறித்த பகுதியிலுள்ள வர்த்தக நிலையங்கள் பல இன்றும் மூடப்பட்டிருந்தன.
நாட்டில் கொவிட் டெல்டா வைரஸ் பரவலுக்கு மத்தியில், பல பிரதான நகரங்கள் இயல்பாகவே மூடப்பட்டு வருகின்ற நிலையில், கொழும்பின் பிரதான வர்த்தக மையப் பகுதியொன்று மூடப்படும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும். (TrueCeylon)
Discussion about this post