அதிபர்−ஆசிரியர் சம்பள முரண்பாட்டு பிரச்சினையை பேச்சுவார்த்தைகளின் ஊடாக தீர்ப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக புதிய கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
புதிய கல்வி அமைச்சராக ஜனாதிபதி முன்னிலையில் சத்திய பிரமாணம் செய்துக்கொண்டதன் பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
உரிய தரப்பினருடன் கலந்துரையாடல்களை நடத்தியதன் பின்னர், உரிய வகையில் பிரச்சினைகளை முடிவுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
மாணவர்களின் எதிர்காலம் குறித்து மிக ஆழமாக சிந்தித்து, உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். (TrueCeylon)
Discussion about this post