இரண்டாம் இணைப்பு
ஹெய்டியில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்தினால் 304 பேர் உயிரிழந்துள்ளதாக அந்த நாட்டு பிரதமர் அறிவித்துள்ளார்.
இந்த நிலநடுக்கத்தினால் 1800 பேருக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாக பிரதமர் கூறியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
7.2 ரிக்டர் அளவில் பதிவான நிலநடுக்கத்தை அடுத்து, ஹெய்டியில் அவசர நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், நிலநடுக்கத்தினால் பல கட்டிடங்கள் இடிந்து வீழ்ந்துள்ளதுடன், கட்டிடத்தின் இடிபாடுகளுக்குள் மேலும் பலர் சிக்குண்டிருக்கலாம் என அந்த நாட்டு பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
இடிபாடுகளுக்குள் சிக்குண்டவர்களை மீட்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
முதலாம் இணைப்பு
ஹெய்டியில் பாரிய நிலநடுக்கமொன்று பதிவாகியுள்ளது.
7.2 ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவிக்கின்றது.
இந்த நிலநடுக்கத்தினால் பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நிலநடுக்கத்தை அடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், பின்னர் சுனாமி எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டுள்ளது.
Discussion about this post