தமக்கு பொலிஸாரோ அல்லது வேறு எந்தவொரு தரப்பினரோ எவ்விதத்திலும் அச்சுறுத்தல்களை பிரயோகிக்கவில்லை என முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனின் வீட்டில் தீ காயங்களுடன் மர்மமான முறையில் உயிரிழந்த ஹிஷாலினியின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
ஹிஷாலினியின் சடலம் மீதான இரண்டாவது பிரேத பரிசோதனை நிறைவடைந்து, சடலத்தை மீள பெற்றுக்கொள்ளும் சந்தர்ப்பத்தில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவரது தாய் R.ரஞ்ஜனி தெரிவித்துள்ளார்.
பேராதனை போதனா வைத்தியசாலையில் நேற்றைய தினம் (13) ஹிஷாலினியின் சடலத்தை அவரது தாய் மற்றும் சகோதரன் ஆகியோர் மீளப் பெற்றுக்கொண்டிருந்தனர்.
இவ்வாறு மீளப் பெற்றுக்கொள்ளப்பட்ட சடலம், டயகம பகுதியில் நேற்றிரவு அடக்கம் செய்யப்பட்டது. (TrueCeylon)
Discussion about this post