கண்டி ஶ்ரீ தலதா மாளிகையின் வருடாந்த உற்சவத்தின் போது, நாத்த தேவாலயத்தின் பஸ்நாயக்க நிலமே பயணித்த வாகனத்தின் மீது அசிட் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
பஸ்நாயக்க நிலமே பயணித்த வாகனம் மற்றும் மேலும் சில வாகனங்களை இலக்கு வைத்தே, இந்த அசிட் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த அசிட் தாக்குதலினால் எவருக்கும், எந்தவித பாதிப்பும் கிடையாது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இம்முறை உற்சவத்திற்கு பொதுமக்கள் அனுமதிக்காத பின்னணியில், அதிவுயர் பாதுகாப்பு வலயத்திற்குள் வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. (TrueCeylon)
Discussion about this post