இன்று (13) நள்ளிரவு முதல் மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து முழுமையாக தடை செய்யப்படும் என இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியுடன் இன்று (13) இடம்பெற்ற சந்திப்பின் போதே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், மாகாணங்களுக்கு இடையிலான பொது போக்குவரத்து இன்று நள்ளிரவு முதல் முழுமையாக நிறுத்தப்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
எனினும், துறைமுகம், ஆடைத் தொழிற்சாலை உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகள் மாத்திரம் வழமை போன்று இடம்பெறும் என அவர் தெரிவிக்கின்றார்.
இதேவேளை, எதிர்வரும் செப்டம்பர் மாதம் 15ம் திகதிக்கு பின்னர், கொவிட் தடுப்பூசி பெற்றமைக்கான அட்டை இல்லாது, பொது இடங்களுக்கு பிரவேசிப்பது தொடர்பில் சோதனைகள் முன்னெடுக்கப்படும் என இராணுவ தளபதி குறிப்பிடுகின்றார். (TrueCeylon)
Discussion about this post