கொவிட் தடுப்பூசியின் இரண்டு மருந்தளவுகளையும் (DOSE) பெற்றுக்கொண்டவர்கள், கொவிட் வைரஸ் தாக்கத்திலிருந்து முழுமையாக பாதுகாக்கப்படுகின்றார்கள் என ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோய் எதிர்ப்பு மற்றும் ஒவ்வாமை பிரிவின் பிரதானி டொக்டர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.
டுவிட்டர் பதிவொன்றின் ஊடாகவே அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
தடுப்பூசியை முழுமையாக பெற்றவர்களுக்கு, தற்போதைக்கு மேலதிக மருந்தளவு (DOSE) தேவையில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
எனினும், நோய் எதிர்ப்பு சக்தி மிக குறைந்தவர்களுக்கு பைசர், பையோஎன்டெக் மற்றும் மொடோர்னா ஆகிய தடுப்பூசிகளின் மூன்றாவது மருந்தளவை பெற்றுக்கொள்ள அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் டொக்டர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.(TrueCeylon)
Individuals who are fully vaccinated are adequately protected and do not need an additional dose of Covid-19 vaccine as of now.
— Chandima Jeewandara (@chandi2012) August 13, 2021
Discussion about this post