அதிபர்−ஆசிரியர் சம்பள பிரச்சினை தொடர்பில் எதிர்வரும் வாரத்திற்குள், தொழிற்சங்கங்களை வெவ்வேறாக சந்தித்து கலந்துரையாட, குறித்த பிரச்சினை குறித்து ஆராய நியமிக்கப்பட்ட அமைச்சரவை இணைக்குழு தீர்மானித்துள்ளது.
அதிபர்−ஆசிரியர் சம்பள பிரச்சினை குறித்து ஆராய்ந்து, பரிந்துரைகளை முன்வைப்பதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவை இணைக்குழு, அமைச்சர் விமல் வீரவங்ச வீட்டில் நேற்று (12) சந்தித்து கலந்துரையாடல்களை சந்தித்திருந்தது.
இந்த பிரச்சினை குறித்து இதுவரை எடுக்கப்பட்டுள்ள தீர்மானங்கள் தொடர்பிலான தகவல்களை, கல்வி அமைச்சிலிருந்து, குறித்து குழு பெற்றுக்கொண்டுள்ளது.
அமைச்சர்களான விமல் வீரவங்ச, டளஸ் அழகபெரும, மஹிந்த அமரவீர, பிரசன்ன ரணதுங்க ஆகியோர் இந்த குழுவில் இடம்பிடித்துள்ளனர். (TrueCeylon)
Discussion about this post