Notice: Trying to get property 'end' of non-object in /home/trueceylon/public_html/wp-content/themes/jnews/class/ContentTag.php on line 36
முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனின் மைத்துனரான ஷியாப்தீன் இஷ்மத்தை நீதிமன்றத்தில் எதிர்வரும் 16ம் திகதி முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு மேலதிக நீதவான், சிறைச்சாலைகள் திணைக்களத்திற்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
ரிஷாட் பதியூதீனின் கறுவாத்தோட்டம் பகுதியிலுள்ள வீட்டில் பணிக்கு அமர்த்தப்பட்டிருந்த சிறுமி ஒருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பில், கறுவாத்தோட்டம் பொலிஸார் நீதிமன்றத்தில் நேற்று (11) விடயங்களை தெளிவூட்டியிருந்தனர்.
2016ம் ஆண்டு வீட்டுப் பணிப் பெண்ணாக வேலைக்கு அமர்த்தப்பட்ட குறித்த சிறுமி, சந்தேகநபரினால் இரு வேறு சந்தர்ப்பங்களில் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார், நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தனர்.
நுவரெலியாவிற்கு சுற்றுலா சென்றிருந்த சந்தர்ப்பத்தில், சிறுமியை ஹோட்டல் அறைக்கு அழைத்து சென்று துஷ்பிரயோகம் செய்ததாகவும், பின்னர் கறுவாத்தோட்டம் பகுதியிலுள்ள வீட்டில் வைத்து இரண்டாவது முறை துஷ்பிரயோகம் செய்ததாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் நீதிமன்றத்தில் குறிப்பிட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் வீட்டின் உரிமையாளர் “மேடம்” யிடம் கூறிய போதிலும், அது பலனலிக்கவில்லை எனவும், பின்னர் தான் அந்த வீட்டிலிருந்து வெளியேறியதாகவும் பாதிக்கப்பட்ட பெண், முறைபாட்டில் தெரிவித்துள்ளதாக பொலிஸார் நீதிமன்றத்தில் கூறியுள்ளனர்.
டயகம பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவரே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.
பொலிஸாரினால் நீதிமன்றத்திற்கு விடயங்கள் தெளிவூட்டப்பட்டதன் பின்னரே, நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
ஹிஷாலினியின் உயிரிழப்பை அடுத்து நடத்தப்பட்ட விசாரணைகளில் யுவதியொருவரை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில்
முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனின் மைத்துனரான ஷியாப்தீன் இஷ்மத் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அத்துடன், பாதிக்கப்பட்டதாக கூறப்படும் சிறுமி தொடர்பிலான வைத்திய பரிசோதனை அறிக்கையை, நீதிமன்றத்திற்கு சமர்பிக்குமாறும் நீதவான் நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளார். (TrueCeylon)
Discussion about this post