வைரஸ் பரவலின் ஊடாக, நாட்டில் வாழும் மக்கள் மிருகங்களை போன்று உயிரிழப்பார்களாயின், அது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவிக்கின்றார்.
கொழும்பில் நேற்று (10) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
கொவிட் தடுப்பூசியை செலுத்த தெரியாதவர்களை வைத்து, தடுப்பூசி செலுத்தப்படுவதாக தம்மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றது என அவர் கூறினார்.
ஆயுதங்களை வைத்திருக்கும் இராணுவ ரெஜிமெண்ட்களை ஈடுபடுத்தி தடுப்பூசி செலுத்தவில்லை என கூறிய அவர், அனுபவம் வாய்ந்த வைத்திய குழாமினரே தடுப்பூசிகளை செலுத்தி வருவதாகவும் குறிப்பிட்டார். (TrueCeylon)
Discussion about this post