எதிர்வரும் திங்கட்கிழமை (08) முதல் 27 அத்தியாவசிய பொருட்களுக்கான கட்டுப்பாட்டு விலைகளை வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன அறிவித்துள்ளார்.
இந்த கட்டுப்பாட்டு விலைகள் எதிர்வரும் 3 மாத காலத்தில் செலுப்படியாகும் என அவர் கூறியுள்ளார்.
வர்த்தக அமைச்சில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
சதொச, கூட்டுறவு நிலையங்களில் இந்த பொருட்களை கட்டுப்பாட்டு விலையின் கீழ் கொள்வனவு செய்ய முடியும் என அவர் அறிவித்துள்ளார்.
கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்ட பொருட்களின் விபரங்கள்
01.சிவப்பு பச்சை அரிசி 1 கிலோகிராம் – (புதிய விலை) 93 ரூபா – (பழைய விலை) 106 ரூபா
02.வெள்ளை பச்சை அரிசி 1 கிலோகிராம் (புதிய விலை) 93 ரூபா – (பழைய விலை) 105 ரூபா
03.வெள்ளை நாடு 1 கிலோகிராம் (புதிய விலை) 96 ரூபா – (பழைய விலை) 109 ரூபா
04.சம்பா 1 கிலோகிராம் (புதிய விலை) 99 ரூபா – (பழைய விலை) 120 ரூபா
05.கீரி சம்பா 1 கிலோகிராம் (புதிய விலை) 125 ரூபா – (பழைய விலை) 140 ரூபா
06.கோதுமை மா 1 கிலோகிராம் (புதிய விலை) 84 ரூபா – (பழைய விலை) 105 ரூபா
07.வெள்ளை சீனி 1 கிலோகிராம் (புதிய விலை) 84 ரூபா – (பழைய விலை) 105 ரூபா
08.சிவப்பு சீனி 1 கிலோகிராம் (புதிய விலை) 99 ரூபா – (பழைய விலை) 110 ரூபா
09.தேயிலை தூள் (100கிராம்) (புதிய விலை) 95 ரூபா – (பழைய விலை) 130 ரூபா
10.சிவப்பு பருப்பு (அவுஸ்திரேலியா) 1 கிலோகிராம் (புதிய விலை) 165 ரூபா – (பழைய விலை) 188 ரூபா
11.பெரிய வெங்காயம் (இந்தியா) 1 கிலோகிராம் (புதிய விலை) 120 ரூபா – (பழைய விலை) 140 ரூபா
12.உள்நாட்டு உருளைகிழங்கு 1 கிலோகிராம் (புதிய விலை) 180 ரூபா – (பழைய விலை) 216 – 220 ரூபா
13.பாகிஸ்தான் உருளைகிழங்கு 1 கிலோகிராம் (புதிய விலை) 140 ரூபா – (பழைய விலை) 190 ரூபா
14.கடலை ஒரு கிலோகிராம் (புதிய விலை) 175 ரூபா – (பழைய விலை) 225 ரூபா
15.காய்ந்த மிளகாய் 1 கிலோகிராம் (புதிய விலை) 495 ரூபா – (பழைய விலை) 550 ரூபா
16.உள்நாட்டு ரின் மீன் 425 கிராம் (புதிய விலை) 220 ரூபா – (பழைய விலை) 240 ரூபா
17.இறக்குமதி செய்யப்படும் ரின் மீன் 425 கிராம் (புதிய விலை) 265 ரூபா – (பழைய விலை) 280 ரூபா
18.நெத்தலி மீன் 1 கிலோகிராம் (புதிய விலை) 545 ரூபா – (பழைய விலை) 700 ரூபா
19.தோலுடனான கோழி இறைச்சி (புதிய விலை) 400 ரூபா – (பழைய விலை) 430 ரூபா
20.கட்டி உப்பு 1 கிலோகிராம் (புதிய விலை) 43 ரூபா – (பழைய விலை) 55 ரூபா
21.பால் மா 400கிராம் (புதிய விலை) 355 ரூபா – (பழைய விலை) 380 ரூபா
22.சோயா எண்ணெய் 500 மில்லிலீற்றர் (புதிய விலை) 310 ரூபா – (பழைய விலை) 470 ரூபா
23.ஆடைகளை கழுவும் சவற்காரம் (பீசீசீ) 115கிராம் (புதிய விலை) 43 ரூபா – (பழைய விலை) 53 ரூபா
24.ஆடைகளை கழுவும் சவற்காரம் 650 கிராம் (புதிய விலை) 260 ரூபா – (பழைய விலை) 325 ரூபா
25.வாசனை சவற்காரம் 100கிராம் (புதிய விலை) 56 ரூபா – (பழைய விலை) 63 ரூபா
26.கைகளை கழுவும் திரவம் 100 மில்லிலீற்றர் (புதிய விலை) 250 ரூபா – (பழைய விலை) 350 ரூபா
27.முகக்கவசம் (எஸ்.எல்.எல் தரச்சான்றிதழ்) (புதிய விலை) 14 ரூபா – (பழைய விலை) 25 ரூபா (TrueCeylon)
Discussion about this post