கொவிட் தடுப்பூசி இறக்குமதிக்காக அரசாங்கத்தினால் இதுவரை 110 மில்லியன் அமெரிக்க டொலர் செலவிடப்பட்டுள்ளதாக நிதி அமைச்சின் செயலாளர் S.R.ஆட்டிகல தெரிவிக்கின்றார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலொன்றில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இதனைக் கூறியிருந்தார்.
ஜுன் மாதம் வரை கொவிட் தடுப்பூசி தவிர்ந்த ஏனைய கொவிட் தடுப்பு நடவடிக்கைகளுக்காக 53,000 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.
2020ம் ஆண்டு முதல் 6 மாதங்களுடன் ஒப்பிடுகையில், 2021ம் ஆண்டு முதல் 6 மாதங்களில் வரி வருமானம் 8 வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் அவர் தெரிவிக்கின்றார். (TrueCeylon)
Discussion about this post