இலங்கையில் கொவிட் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,742ஆக அதிகரித்துள்ளது.
இறுதியாக 46 கொவிட் உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவிக்கின்றது.
உயிரிழந்தவர்களில் 23 ஆண்களும் , 23 பெண்களும் அடங்குவதாக திணைக்களம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், 13 பேர் வீட்டிலேயே உயிரிழந்துள்ளதுடன், 2 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கும் சந்தர்ப்பத்தில் உயிரிழந்துள்ளனர்.
எஞ்சிய 31 பேரும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளனர்.
Discussion about this post