நாட்டில் பயணக் கட்டுப்பாடு தொடர்ந்தும் அமலில் உள்ள இந்த நிலையிலும், கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருகின்றது.
இதன்படி, நேற்றைய தினம் கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவிலான கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கொழும்பு மாவட்டத்தில் நேற்றைய தினத்தில் மாத்திரம் 828 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அதேவேளை, கண்டி மாவட்டத்தில் கொவிட் தொற்றினால் கடந்த ஒக்டோபர் 4ம் திகதி முதல் நேற்றைய தினம் வரை 10,000 தை தாண்டிய தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர்.
10,000தை தாண்டிய தொற்றாளர்கள் பதிவான 4வது மாவட்டமாக கண்டி மாவட்டம் பதிவாகியுள்ளது. (TrueCeylon)
Discussion about this post