மூன்றாம் இணைப்பு
மாவனெல்ல பகுதியில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் காணாமல் போன ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வரின் சடலங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
முன்னதாக 16 வயது யுவதியின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டு இருந்தது.
தற்போது அந்த குடும்பத்தில் உள்ள அனைவரது சடலங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை, மகன் மற்றும் மகள் ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.
இவர்களின் வயது முறையே 57, 53, 34 மற்றும் 23 வயது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இரண்டாம் இணைப்பு
மாவனெல்ல பகுதியில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் காணாமல் போன ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வரில் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
16 வயதான யுவதியொருவரின் சடலமே இவ்வாறு கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் தந்தை, தாய், மகன் மற்றும் மகள் ஆகியோர் மண்மேட்டிற்குள் சிக்குண்டுள்ளனர்.
இவ்வாறு சிக்குண்டவர்களில் மகளின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இராணுவத்தின் மீட்பு பணியாளர்கள் தொடர்ந்தும் மீட்புப் பணிகளை முன்னெடுத்து வருவதாக இராணுவம் அறிவித்துள்ளது.
முதலாம் இணைப்பு
மாவனெல்ல − தெவனகல பகுதியில் வீடொன்றின் மீது மண்மேடொன்று சரிந்து வீழ்ந்ததில் நால்வர் காணாமல் போயுள்ளனர்.
இவ்வாறு காணாமல் போன நபர்களை தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது.
இதேவேளை, வரகாபொல − எல்கம பகுதியிலுள்ள வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
Discussion about this post