ஆரம்ப பிரிவு முதல் உயர்தரம் வரை, அனைத்து பாடதிட்டங்களையும் ஆங்கில வழியில் கற்பிக்கும் முறைமையொன்றை அறிமுகப்படுத்த கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு ஆங்கில வழியில் கல்வி முறைமையை அறிமுகப்படுத்துவதிலுள்ள சாத்தியம் குறித்து ஆராய, கல்வி அமைச்சினால் விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, நுகேகொடை விஜயராம மகா வித்தியாலயத்தில் முதல் தடவையாக இந்த திட்டத்தை அறிமுகப்படுத்த கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
Discussion about this post