இரண்டாம் இணைப்பு
ஜனாதிபதி செயலகம் உள்ளிட்ட 6 இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டதாக இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கம் வெளியிட்ட அறிக்கை உண்மைக்கு புறம்பானது என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.
இந்த போலியான தகவலை பகிர்ந்தமைக்காக இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கத்தின் தலைவர் ரஜீவ் யசிரு குருவிட்டகேவிடம், பொலிஸார் விசாரணைகளை நடத்தவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

முதலாம் இணைப்பு
ஜனாதிபதி செயலகம் உள்ளிட்ட பிரதான பல அரச நிறுவனங்களின் இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
ஜனாதிபதி செயலகம், வெளிவிவகார அமைச்சு, மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம், இலங்கை நில அளவையாளர் திணைக்களம், குடும்ப சுகாதார அலுவலகம், வடமேல் மாகாண பயிற்சி மற்றும் அபிவிருத்தி பிரிவு ஆகிய இணையத்தளங்கள் மீதே சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவின் உத்தியோகப்பூர்வ இணையத்தளம் மீது நேற்று முன்தினம் சைபர் தாக்குதல் நடத்தப்பட்டிருந்த பின்னணியிலேயே, தற்போது பிரதான 6 இணையத்தளங்களுக்கு சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
Discussion about this post