அத்தியாவசிய சேவைக்காக கடமைகளுக்கு வருகைத் தருமாறு, நிறுவன பிரதானிகளினால் விநியோகிக்கப்பட்டுள்ள கடிதங்களின் உண்மை தன்மை குறித்து ஆராய்வதற்காக, விசேட சோதனை நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவிக்கின்றார்.
இந்த விசாரணைகளை முன்னெடுப்பதற்காக 6 பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.
கொழும்பு நகருக்குள் பிரவேசிக்கும் நுழைவாயில்களில் பெற்றுக்கொள்ளப்படும் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.
அத்துடன், அத்தியாவசிய சேவைக்காக வருகைத் தருவோர், குறித்த கடமைகளுக்கு செல்கின்றார்களா என்பது குறித்தும் ஆராயப்படவுள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார்.
Discussion about this post