நேற்றை (02) தினத்துடன் நிறைவடைந்த கடந்த 10 நாட்களுக்குள் கொவிட் தொற்றினால் 300ற்கு அண்மித்த உயிரிழப்புக்கள் இலங்கையில் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி, மே மாதம் 22ம் திகதி முதல் நேற்றைய தினம் வரை 296 கொவிட் உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளன.
மே மாதம் 25 மற்றும் 27ம் திகதிகளிலேயே அதிகளவிலான உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளன.
குறித்த இரு தினங்களிலும் தலா 36 பேர் உயிரிழந்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.
அத்துடன். மே 23 மற்றும் 26ம் திகதிகளில் 32 பேர் உயிரிழந்துள்ளனர்.
மே 29ம் திகதி 30 உயிரிழப்புக்களும், மே 28ம் திகதி 28 உயிரிழப்புக்களும், மே 30ம் திகதி 26 உயிரிழப்புக்களும் பதிவாகியுள்ளன.
இதுவரை வெளியாகியுள்ள தகவல்களின் படி, ஜுன் மாதம் முதலாம் திகதியே குறைவான மரணங்கள் பதிவாகியுள்ளன.
ஜுன் முதலாம் திகதி 5 கொவிட் உயிரிழப்புக்கள் மாத்திரமே பதிவாகியுள்ளன.
கொவிட் தொற்றினால் நாட்டில் இதுவரை 1566 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Discussion about this post